மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றிய வடகொரியா: புகைப்படத்தை வெளியிட்ட ஜப்பான்

February 15 18:34 2018 Print This Article

ஐ.நா சபையின் பொருளாதார தடையை மூன்றாவது முறையாக வட கொரியா மீறியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள், ஐநாவின் கண்டனத்தையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இதனையடுத்து அமெரிக்கா மற்றும் ஐநா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன, இதை வடகொரியா மீறி மில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜப்பானிய உளவு விமானம் ஒன்று Shanghai நகரின் கிழக்கு நோக்கி 155 மைல் தொலைவில் வட கொரிய கொடியுடன் காணப்பட்ட Rye Song Gang 1 எனும் கப்பலை புகைப்படம் எடுத்துள்ளது.

இந்த கப்பல் வட கொரிய அரசுக்கு சொந்தமான கப்பல் ஆகும், ஐநா சபையால் எந்த துறைமுகமும் அனுமதி அளிக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள 8 கப்பல்களில் Rye Song Gang 1 எனும் இந்த கப்பலும் ஒன்றாகும்.

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Rye Song Gang 1 எனும் வடகொரிய கப்பல் மற்றொரு கப்பலுடன் சரக்குகளை மாற்றியுள்ளதாக ஜப்பான் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கப்பலான Wan Heng 11 பெலீஸின் கொடியுடன் காணப்பட்டதாகவும், இது Hong Kong சார்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக கடந்த இருமுறை நடுக்கடலில் சரக்குகள் மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.